உள்ளங்கைகளுக்குள் அடங்கும் குறைப்பிரசவக் குழந்தை

தோக்கியோவில் பிறந்த குறைப்பிரசவக் குழந்தை ஒன்று, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய உலகிலேயே ஆகக் குறைந்த எடையைக் கொண்டுள்ள குழந்தையாக உள்ளது. பிறந்தபோது குழந்தையின் இடை 268 கிராம்.

தாயின் கருப்பையில் ஜனித்து 24 வாரங்களுக்குப் பிறகு குழந்தை மேலும் வளராததால் அது கருப்பையிலிருந்து எடுக்கப்பட்டது. உள்ளங்கைகளுக்குள் அடங்கக் கூடிய அளவில் அது மிகச் சிறிதாக இருந்தது. ஆனால் ஐந்து மாத சிகிச்சைக்குப் பிறகு அதன் எடை இப்போது 3.238 கிலோகிராம் ஆக உள்ளது. ஐந்து மாதங்கள் மருத்துவமனையில் தங்கிய பிறகு அது கேயோ பல்கலைக்கழக மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியது. இப்போது அந்தக் குழந்தை சரியாக சாப்பிடுவதாக அந்த மருத்துவமனை கூறியது. குழந்தையின் எடை அளவு கூடியது குறித்து மகிழ்ச்சி அடைவதாக குழந்தையின் தாயார் அந்நாட்டின் ஊடகங்களிடம் தெரிவித்தார். 

இந்தக் குழந்தை, 2009ஆம் ஆண்டில் ஜெர்மானிய ஆண் குழந்தையின் சாதனையை முறியடித்தது. அதன் எடை அப்போது 274 கிராமாக இருந்தது. பிறந்தபோது ஆகக் குறைவான எடையை (252 கிராம்) கொண்டு பிறந்த பெண் குழந்தை ஜெர்மனியைச் சேர்ந்தது.