இந்தோனீசிய சுரங்க விபத்தில் பலர் மாயம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலாவசி தீவில் சட்டவிரோதமாகச் செயல்படும் தங்கச் சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 45 பேர் உயிரோடு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
போலாங் மோகோன்டோவ் மலைப்பிரதேசத்தில் தங்கச் சுரங் கம் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருகிறது.
கயிறுகளை உள்ளே செலுத்தி யும் பக்கவாட்டில் தோண்டியும் உயிரோடு இருப்பவர்களை மீட்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
“சுரங்கத்திலிருந்து சிலரது குரல் கேட்கிறது,” என்று மீட்புப் பணியாளர்களில் சிலர் கூறினர்.
“குரல் கேட்பதால் பலர் உயிரோடு இருக்கின்றனர்,” என்று மீட்புப் படையைச் சேர்ந்த ஒருவர் சொன்னார்.
இந்நிலையில் நேற்று காலை ஒரு சடலம் மீட்கப்பட்டது. ஆனால் மூன்று பேர் வரை இறந்துவிட்டதாக இந்தோனீசிய ஊடகங்கள் தெரி விக்கின்றன.
இந்தோனீசிய அரசாங்கம், சிறிய அளவிலான தங்கச் சுரங் கங்களுக்குத் தடை விதித் துள்ளது. இருப்பினும் உள்ளூர் அதிகாரிகள் அதைப் பொருட் படுத்துவதில்லை.
இதனால் பல தங்கச் சுரங் கங்கள் சட்டவிரோதமாக செயல் பட்டு வருகின்றன. தேடுதல், மீட்புக் குழுவினரும் ராணுவமும் ஒன்றாகச் சேர்ந்து ஈடுபட்டாலும் எந்த நேரத்திலும் நிலச்சரிவு ஏற் படலாம் என்பதால் கயிறு, மண் தோண்டி போன்ற எளிய சாதனங்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சுரங்க விபத்து பற்றி கேள்வியுற்ற உற்றார், உற வினர்கள் சம்பவ இடத்தில் கூடத் தொடங்கியுள்ளனர்.