வெங்காயத்தின் எடையேயுள்ள உலகின் மிகச் சிறிய குழந்தை

தோக்கியோ: ஜப்பானில் மருத்துவ உலகை வியக்க வைக்கும் வகையில் ஒரு பெரிய வெங்காயத்தின் எடையேயுள்ள மிகக்சிறிய குழந்தை பிறந்துள் ளது. குறைப்பிரசவத்தில் பிறந்த சிசுவின் எடை 268 கிராம்.
கருப்பையில் சிசுவின் வளர்ச்சி நின்றுவிட்டதாகக் கூறப்பட்டதால் 24 வாரத்தில் குழந்தை பிறந்துள்ளது.
ஐந்து மாத தீவிர சிகிச் சைக்குப் பிறகு சிசுவின் எடை 3.238 கிலோவுக்கு அதிகரித் தது. இதனால் குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்செல்ல தோக்கியோவில் உள்ள கெயோ பல்கலைக்கழக மருத்துவமனை அனுமதி வழங்கியது.
“குழந்தையின் எடை கூடியது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக் கிறது,” என்று சிசுவின் தாயார் கூறியுள்ளார்.
குழந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் டாகே‌ஷி அரிமிட்சு, “எடை குறைவாக இருந்தாலும் நல்ல உடல் நிலையுடன் குழந்தை வீடு திரும்பக்கூடிய சாத்தியம் உள்ளது,” என்றார்.
இதற்கிடையே உலகிலேயே மிகச்சிறிய குழந்தை நல்ல உடல் நிலையுடன் வீடு திரும்பியிருப்பது உலக சாதனை என்று கெயோ பல்கலைக்கழக மருத்துவமனை குறிப்பிட்டது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்