தள்ளாடிய விமானம்

லண்டன்: சுழன்று வீசிய காற்றில் சிக்கிய பிரிட்டிஷ் விமானம் ஒன்று பக்கவாட்டில் இப்படியும் அப்படியுமாக தள்ளாடியதால் பயணிகள் அஞ்சி நடுங்கினர்.  ஜிப்ரால்டர் தீவில் தரை இறங்கியபோது விமானம் ஆட்டம் கண்டது. இதனால் விமானத்தை தரையிறக்கும் முயற்சியை விமானிகள் பாதியில் கைவிட்டனர். யுடியூப்பில் பதிவேற்றப்பட்ட காணொளிகளில் தாழ்வாகப் பறந்த ஏர்பஸ்-A320 ரக விமானம் கடலில் மூழ்கும் படகு போல தள்ளாடியதைப் பார்க்க முடிந்தது.  திங்கட் கிழமை காலை 8.25 மணிக்கு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் இரண்டரை மணி நேரத்தில் ஜிப்ரால்டர் தீவை அடைய வேண்டும். ஆனால் தரையிறங்க முடியாததால் எட்டு நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்த பிறகு ஸ்பெயினில் உள்ள மலாகாவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.