கொழுத்த எலிக்கு உதவிக்கரம்

பெர்லின்: ஜெர்மனியில் கொழுத்த எலிக்கு விலங்கு பாதுகாவலர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் பென்ஷெய்ம் நகரில் சாக்கடை மூடியின் துவாரத்தில் எலியின் கால் சிக்கிக்கொண்டது. இதைக் கண்ட சிறுமி ஒருவர் விலங்குப் பாதுகாவலர் களுக்குத் தகவல் கொடுக்க, விலங்கு மீட்பாள ரான மைக்கல் சேஹர் அங்கு ஓடி வந்தார். ஆனால் அவரால் எலியின் காலை விடுவிக்க முடியவில்லை. இதனால் தீ அணைப்புத் துறையின் தொண் டூழியர்களை அவர் உதவிக்கு அழைத்தார். சிறிது நேரத்தில் அங்கு கூடிய ஒன்பதுக்கும் மேற்பட்ட  தொண்டுழியர்கள் சாக் கடை மூடியைத் தூக்கி எலியை விடுவித்தனர். எலிக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை  என்று தெரிவிக்கப்பட்டது.