கெய்ரோ ரயில் நிலையத்தில் தீ; 25 பேர் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள முக்கிய ரயில் நிலையத் தில் நேற்று தீ விபத்து நிகழ்ந்ததில் குறைந்தது 25 பேர் மாண்டனர் என்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்தது. மத்திய ராம்சேஸ் நிலையத்தில் கான்கிரீட் தடுப்பின் மீது ரயில் மோதியதால் எரிபொருள் தொட்டி வெடித்து சிதறியது. இதில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது. 
படம்: ஏஎஃப்பி