நேருக்கு நேர் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும், இன்று மீண்டும் வடகொரியாவின் அணுவாயுதக் களைவு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (புதன்கிழமை 27ஆம் தேதி) மாலை அவ்விரு தலைவர்களும் வியட்னாமியத் தலைநகர் ஹனோயில் சந்தித்து இரவு உணவு உண்டனர்.

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தைத் திரு கிம் கைவிடவேண்டும் என்பது இந்தச் சந்திப்புக்கான அமெரிக்காவின் நோக்கம்.

இன்று திரு டிரம்ப்பும் திரு கிம்மும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரியத் தீபகற்பத்தின் நிலையான அமைதிக்கு இட்டிச்செல்லுமா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாக உள்ளது. 

சிங்கப்பூரில் கடந்தாண்டு சந்தித்த இந்தத் தலைவர்கள், எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வியட்னாமில் பேச்சுவார்த்தைகளுக்காக இணைகின்றனர். அப்போதைய சந்திப்பின் முடிவுகள் சிறப்பாக அமையாவிட்டாலும் இம்முறை திரு கிம், அணுவாயுதக் களைவுக்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த சம்மதிப்பார் என்று திரு டிரம்ப்பின நிர்வாகம் நம்புகிறது.

“இன்றைய சிறப்பான, வெற்றிகரமான சந்திப்புக்குத் திரு அதிபரே, நீங்களும் உங்கள் குழுவினரும் எடுத்துள்ள தைரியமிக்க அரசியல் முடிவே காரணம்,” என்று திரு கிம், நேற்றைய சந்திப்பில் தெரிவித்தார். திரு டிரம்ப்புடன் திரு கிம் சிரித்துக்கொண்டே பேசியதாகச் சந்திப்பில் இருந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு தொடங்கவும் தன்மீதுள்ள அனைத்துலக வர்த்தகத் தடைகள் நீங்கவும் வடகொரியா விரும்புகிறது. ஆனால் வடகொரியா தனது அணுவாயுதத் திட்டத்தைக் களையும் வரை இவையெல்லாம் சாத்தியமல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்

19 Jun 2019

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2019

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

ஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்