வெள்ளை மாளிகை: டிரம்ப்பும் கிம்மும் ஒப்பந்தத்தில் இணையப்போவதில்லை

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான உச்சநிலைச் சந்திப்பு இரண்டு மணிநேரத்திற்குக் குறைக்கப்படும் என்று வெள்ளை மாளிகை திடீரென அறிவித்திருக்கிறது. 

இந்த இரண்டு தலைவர்கள் ஒப்பந்தத்தில் இணையப் போவதில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி காலை 10 மணிக்கு இவர்கள் கலந்துரையாடலில் ஈடுபடத் தொடங்கினர். அந்தக் கலந்துரையாடல் பிற்பகல் 1 மணிக்குள் முடியவேண்டியிருந்தது.  அந்த இரண்டு தலைவர்கள் ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவதற்கான
நிகழ்ச்சி பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்க வேண்டியிருந்தது.

இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் தெளிவாக இல்லை.

அணுவாயுதங்களைக் கைவிட தாம் தயார் என்று திரு கிம் மீண்டும் தெரிவித்தார். அவற்றைக் கைவிட தயாராக இல்லை என்றால் தாம் இங்கு வந்திருக்கமாட்டார் எனக் கூறியிருந்தார்.