மின்படிக்கட்டு விபத்தில் ஒன்பது பேர் காயம்

ஹாங்காங்கின் ‘எம்டிஆர்’ பெருவிரைவு ரயில் நிலையத்தில் மின்படிக்கட்டு ஒன்றில் ஏற்பட்ட பழுதின் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்தனர்.

நோ தாவ் கோக் ரயில் நிலையத்தில் மின் படிக்கட்டுகளில் பொதுமக்கள் பக்கத்தில் சென்றுகொண்டிருந்தபோது நீட்டிக்கொண்டிருந்த பலகை ஒன்றில் ஒரு சிலர் இடறி விழுந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ‘எம்டிஆர்’ ஊழியர் ஒருவர் மின்படிகளை நிறுத்தினார். காயமடைந்த நபர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக ‘எம்டிஆர்’ ஊழியர் தெரிவித்தார். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்