அதிபர் டிரம்ப்: தடைகளை நீக்கும்படி வடகொரியா வலியுறுத்தியதால் உடன்பாடு ஏற்படவில்லை

பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரில் இருக்கும் எல்லைப் புற கிராமங்களை பாகிஸ்தான் காலி செய்கிறது. சக்கோத்தி என்ற ஊர் மக்கள் வாகனங்களில் வேறு இடங்களுக்குச் செல்கிறார்கள். படம்: ராய்ட்டர்ஸ்

வடகொரியா மீது விதிக்கப்பட்டு இருக்கும் தடைகளை அகற்றும்படி அந்த நாடு வலியுறுத்தியதன் காரணமாக உச்சநிலை சந்திப்பில் உடன்பாடு எதுவும் நேற்று ஏற்பட வில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். 
அதிபர் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் இரண்டாவது தடவையாக வியட் னாமின் ஹனோய் நகரில் இரண்டு நாள் உச்சநிலை சந்திப்பு நடத்தி னார்கள். 
அந்தச் சந்திப்பு, கடைசி நாளான நேற்று திட்டமிடப்பட்ட தற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக திடீரென்று முடித்துக் கொள்ளப்பட்டது. உடன்பாடு எது வும் ஏற்படவில்லை. 
அந்தச் சந்திப்பு பற்றி செய்தி யாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், தாங்கள் இருவரும் பயனுள்ள வகையில் பலவற்றையும் விவாதித்ததாகத் தெரிவித்தார். 

கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற வட்டாரமாக்க இன்னும் பலவற்றைச் செய்யும்படி வடகொரியாவை அமெரிக்கா கேட் டுக்கொண்டது என்றும் ஆனால் வடகொரியா மீது விதிக்கப்பட்டு உள்ள தடையை அகற்றவேண்டும் என்று அந்த நாட்டின் தலைவர் வலியுறுத்தியதை அடுத்து உடன் பாடு எதுவும் இல்லை என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொம்பியோ தெரிவித்தார். 
ஹனோய் கூட்டத்தில் விவா திக்கப்பட்ட பல அம்சங்களின் பேரில் இரு தரப்புகளும் தொடர்ந்து செயல்படும் என்றாரவர்.