ஜிஎஸ்டி உயர்வுக்கான நேரம் பற்றி இனிமேல்தான் முடிவு

சிங்கப்பூரில் ஜிஎஸ்டி எனப்படும் விலை பொருள், சேவை வரி 2% அதிகரித்து 9% ஆக உயர இருக்கிறது. ஆனால் இந்த உயர்வு இடம்பெறக்கூடிய துல்லியமான நேரம் பற்றி அரசாங்கம் இனிமேல்தான் முடிவு எடுக்கவேண்டும் என்று நிதி அமைச் சர் ஹெங் சுவீ கியட் நேற்று நாடாளுமன்றத் தில் தெரிவித்தார். 
பொருளியல் நிலவரங்களையும் செல வினப் போக்குகளையும் வருவாய்களையும் தொடர்ந்து மிகவும் கவனமாகப் பரிசீலித்து வரப்போவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 
ஜிஎஸ்டி வரி உயரும்போது அதைச் சமாளிக்க அரசாங்கம் மக்களுக்கு உதவும் என்றும் திரு ஹெங் உறுதி கூறினார். 
புதிய வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மூன்று நாட்கள் பேசிய 55 உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கும் வகை யில் அமைச்சர் நேற்று மன்றத்தில் உரை நிகழ்த்தினார். 
ஜிஎஸ்டி வரி 2021க்கும் 2025க்கும் இடையில் உயர்த்தப்படும் என்று வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு மற்றும் இதர துறைகளில் ஏற்படும் தேவைகளைக் கருத் தில்கொண்டு பார்க்கையில் இந்த உயர்வு அவசியமானது என்றார் அமைச்சர். 
மூப்படையும் சமூகத்தை எதிர்நோக்கக் கூடிய இதர அரசாங்கங்களும் ஜிஎஸ்டி வரி உயர்வு போன்றவற்றை நடப்புக்கு கொண்டு வருவதை அமைச்சர் தமது உரையில் சுட்டிக் காட்டினார். 
மெர்டேக்கா தலைமுறைக்குரிய $6.1 பில்லியன் திட்டம் பற்றியும் அமைச்சர் கருத் துரைத்தார். கடந்த 1950களில் பிறந்தவர் களுக்கான அந்தத் திட்டம், தேர்தலையொட்டி இடம்பெறும் ஒன்று அல்ல என்றார் அவர். 
இப்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பாரா உபரிகளைக் கருத்தில் கொண்டும் அந்தத் திட்டம் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் விளக்கினார். 
இந்த ஆண்டு அமைச்சர் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்று உள்ள மெர்டேக்கா திட்டம் பல ஆண்டு காலம் கவனமாக ஆராயப்பட்டு, அதற்குப் பிறகு தீட்டப்பட்ட ஒரு திட்டம் என்றார் அவர்.