லயன் ஏர் விமானங்களில் பிரச்சினை; விசாரணையைத் தொடங்கிய அமைச்சு

ஜகார்த்தா: லயன் ஏர் விமானச் சேவைகளில் அண்மைய காலங்களில் ஆகாய வெளியில் சென்று கொண்டிருக்கும்போது அதில் பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படுவதையடுத்து இந்தோனீசியாவின் போக்குவரத்து அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் நான்கு விமானச் சேவைகளில் தொழில்நுட்பப் பிரச்சினைகள், விமானத்தில் தேள் இருந்தது போன்றவற்றுக்காக விமானங்கள் கிளம்பிய இடத்துக்கே திரும்ப வேண்டியிருந்தது. தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்த பிறகு சம்பவங்கள், விபத்துகள் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் அல்லது அபராதங்கள் விதிக்கப்படும் என அமைச்சின் விமானத் தகுதிநிலை, செயல்பாட்டு இயக்குநர் கேப்டன் அவிரியான்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.