‘இங்கிலாந்தில் 27,000 சிறுவர்கள் குண்டர் கும்பல்களில் அங்கம் வகிக்கின்றனர்’

லண்டன்: பத்து முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள் தங்களை குண்டர் கும்பல்களின் அங்கம் என்று கூறிக்கொள்வதாக ‘சில்ட் ரன்ஸ் கமிஷனர்’ அமைப்பு மேற் கொண்ட ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. சுமார் 313 சிறு வர்களுக்கு குண்டர் கும்பலின் உறுப்பினர் என்றால் என்ன என்பது தெரிந்திருக்கிறது என் றும் அவர்களில் 34,000 பேர் மோசமான வன்முறைக் குற்றங் களுக்கு ஆளாகியுள்ளனர் என் றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர்களை குண்டர் கும்ப லில் சேர்ப்பதற்கு நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவ தாகவும் தெரியவந்துள்ளது.
குண்டர் கும்பல்களுக்குள் இழுக்கப்படும் அபாயத்தில் உள்ள சிறுவர்களைப் பாதுகாப்பதற்குக் கடப்பாடு கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனநலப் பிரச்சினைகள், குடும்ப வாழ்க்கையில் நிராகரிக்கப் படுபவர்கள் போன்ற சிறுவர்களே எளிதில் இலக்காகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்