விரதத்துக்கு மதிப்பளித்து பாலியில் 468 விமானச் சேவைகள் ரத்து

பாலி: இந்தோனீசியாவில் சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லக்கூடிய பாலியில் உள்ள அனைத்துலக விமான நிலையம் எதிர்வரும் ஏழாம் தேதி செயல்படாது என்று இந்தோனீசியா அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 
6 மணி முதல் 24 மணி நேரத்துக்கு அனைத்துலக விமானச் சேவைகள் உட்பட 468 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் பாலியில் உள்ள இந்துக்கள் ‘நியபி’ எனப்படும் மௌன விரதத்தை மேற்கொள்வதால் அதற்கு மதிப்பளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் அங்கு வசிக்கும் இந்துக்கள் உணவருந்தாமல் விரதம் இருப்பதுடன் தியானமும் செய்வார்கள். மின்சாரம், தீ, மின்னணுவியல் பொருட்களை அன்று நாள் முழுவதும் அவர்கள் பயன்படுத்துவதில்லை.