வெப்பமான வேனிற்காலத்தைக் கடந்த ஆஸ்திரேலியாவில் வறட்சி தொடரும்

சிட்னி: ஆஸ்திரேலியா மிகவும் வெப்பமான வேனிற்காலத்தைக் கடந்திருப்பதாகவும் அதன் தென் வசந்தகாலமும் வழக்கத்தைவிட வறட்சியுடனும் சூடாகவும் இருக்குமென்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் அங்கு அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. நீண்டகால சராசரியைவிட 2 டிகிரி செல்சியசுக்கும் மேலான வெப்பநிலை கடந்த மூன்று மாதங்களில் பதிவாகி இருப்பதாகக் கூறப்பட்டது. வழக்கத்தைவிடக் குறைவான மழைப்பொழிவு இருந்ததாகவும் கூறப்பட்டது.