சுமத்ராவில் நிலநடுக்கம்; பலர் காயம், சுமார் 350 வீடுகள் சேதமுற்றன

ஜகார்த்தா: சுமத்ரா தீவில் நேற்று காலை 6.25 மணியளவில்  5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 48 பேர் காயமுற்றதாகவும் 350க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டது. மேற்கு சுமத்ராவில் உள்ள தெற்கு சோலோக் மாவட்டம் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மருந்தகங்கள் ஆகியன சேதமடைந்ததாகவும் தேசிய பேரிடர் நிர்வாக முகவையின் பேச்சாளர் சுடோபோ நுக்போஹோ கூறினார். 2