மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவிக்க ஐநா பாதுகாப்பு மன்றத்தில் தீர்மானம் தாக்கல்

நியூயார்க்: அண்மையில் நிகழ்த் தப்பட்ட புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மசூத் அஸாரை அனைத்துலக பயங்கரவாதியாக அறிவிக்க பாதுகாப்பு மன்றத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீர்மானம் தாக்கல் செய்துள்ளன.
“மசூத் அஸாரை அனைத்துலக பயங்கரவாதியாக அறிவித்து அவர் எந்த நாட்டுக்கும் செல்லாதவாறு தடை விதித்து அவரது சொத்து களை முடக்க வேண்டும்,” என அவை கோரியுள்ளன.
இந்தக் கோரிக்கையை அடுத்த 10 நாட்களுக்குள் பாதுகாப்பு மன் றத்தின் தடை விதிக்கும் குழு ஆலோசித்து முடிவெடுக்கும். இந் நிலவரத்தை உற்றுநோக்கி வரும் சீனா தீர்மானத்தை ஆதரிக்குமா என்பது உறுதியாகத் தெரிய வில்லை.
இந்நிலையில் மசூத் அஸார் தற்போது பாகிஸ்தானில் இருப் பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரே‌ஷி தெரிவித்துள்ளார். 
“மசூத் அஸாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரால் வீட்டைவிட்டு வெளியே வரமுடி யாத சூழல் ஏற்பட்டிருக்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்

19 Jun 2019

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2019

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

ஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்