பனிப்பாறையில் அமர்ந்த மூதாட்டி கடலில் சிக்கினார்

ஜோகுல்சார்லொன்: படம் எடுப் பதற்காக சிம்மாசனம் போல் தோற்றமளித்த ஒரு பெரிய பனிப் பாறை மேல் அமர்ந்த 77 வயது மூதாட்டி, திடீரென வந்த ஒரு பேரலையால் கடலுக்குள் அடித் துச் செல்லப்பட்டார். டெக்சசைச் சேர்ந்த ஜுடித் ஸ்ட்ரெங், ஐஸ்லாந்துக்குச் சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது ‘டயமண்ட் பீஜ்ச்’ கடற்கரையில் கிடந்த ஒரு பனிப்பாறை மீது ஏறிப் படம் எடுப்பதற்காக மகாராணி தோரணையுடன் உட்கார்ந்தார். அப்போது வந்த ஓர் அலையால் அடித்துச் செல்லப்பட்ட ஜுடித் மெல்ல மெல்ல கடலில் மிதந்து வெகுதூரம் சென்றுவிட்டார். அதைக் கண்ட ஒரு கப்பல் கேப்டன் அவரை மீட்டார். அவருடைய கடல் சாகசத்தைப் படம்பிடித்துக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம் வர, அவற் றைப் பலர் தங்கள் சமூக வலைத் தளப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

கடற்கரையிலிருந்த பனிப்பாறை மீது அமர்ந்த மூதாட்டி பேரலையால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். படம்: கேத்தரின் ஸ்ட்ரெங்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி