பக்கத்தான் ஹரப்பான் தொகுதி எதிர்க்கட்சி வசம்

செமினி: செமினி இடைத்தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அம்னோ கட்சியின் வேட்பாளர் ஸக்காரியா ஹனாஃபி 1,914 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாலை ஐந்து மணிக்குத் தேர் தல் வாக்களிப்பு முடிந்து வாக்கு கள் எண்ணப்பட்டதில் ஏழு மணி அளவிலேயே ஸக்காரியா முன் னணியில் இருந்தார். இரண்டாவது நிலையில் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் மலேசிய பிரிபூமி பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் முகம்மது அய்மான் சைனாலி. மூன்றாவது இடத்தில் பாஸ் கட்சியைச் சேர்ந்த நிக் அஸிஸ் அஃபிக் அப்துல் இருந்தார்.

இறுதி இடத்தில் வந்தவர் சுயேச்சை வேட்பாளரான குவான் சீ ஹெங். செமினி தொகுதியில் உள்ள மொத்தம் 120 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட வாக்குகள் காஜாங்கில் உள்ள நகராட்சி மன்றத்தில் எண்ணப் பட்டன. பொதுமக்களில் மொத்தம் 53,411 பேர் இடைத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந் தார்கள். இவர்களில் 70 விழுக் காட்டினர் வாக்களிப்பர் எனத் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்த போதும் 68 விழுக்காட்டைத் தான் அவ்வெண்ணிக்கை தொட்டது.