டிரம்ப்: அதிக தீர்வை விதிக்கும் நாடு இந்தியா; பதிலுக்குப் பதில் வரி மிரட்டல்

இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக தீர்வை விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைகூறி இருக்கிறார்.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதுடெல்லி விதிக்கும் அதிக தீர்வைக்கு ஈடாக தானும் இந்தியப் பொருட்களுக்கு அதே அளவுக்குத் தீர்வை விதிக்கப் போவதாக அவர் மிரட்டினார். 
அமெரிக்காவில் மேரிலாண்டில் அரசியல் மாநாடு ஒன்றின் கடைசி நாளன்று உரை நிகழ்த்திய அதிபர், இந்தியாவிற்கு ஒரு மோட்டார் சைக்கிளை ஏற்றுமதி செய்தால் அவர்கள் 100% தீர்வை விதிக்கிறார்கள். அதேவேளையில், இந்தியா ஒரு மோட்டார்சைக்கிளை அமெரிக்காவுக்கு அனுப்பினால் அமெரிக்கா, வரி   எதுவும் விதிப்பதில்லை என்றார். 

இந்தியாவைப் போல் தானும் இந்தியப் பொருட்களுக்குத் தீர்வை விதிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். 
இந்தியா, அமெரிக்காவில் இருந்து  இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக தீர்வை விதிக்கிறது என்று இதற்கு முன்பும் அதிபர் டிரம்ப்  குறைகூறி இருக்கிறார். 
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகம் தொடர்பில் 2018ல் சிறு சர்ச்சை ஏற்பட்டது. இந்திய வர்த்தகர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று கூறி குறிப்பிட்ட சில வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. 
இந்தியாவின் வர்த்தக முதலீட்டுக் கொள்கைகளுக்கு எதிராக இந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி அமெரிக்கா மேலும் ஓர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. 
அமெரிக்கா, இந்தியாவுக்கு அளித்திருக்கும் பொதுச் சலுகை ஏற்பாட்டின் கீழ், US$5.6 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை இந்தியா, அமெரிக்காவுக்குத் தீர்வையின்றி ஏற்றுமதி செய்யலாம். இந்தச் சலுகையை மீட்டுக்கொள்ளப்போவதாக அமெரிக்கா அறிவித்துவிட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பசிபிக் தீவுகள் மாநாட்டின்போது நடைபெற்ற தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் (இடமிருந்து வலம்) நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா, சமோவா பிரதமர் துயிலேப்பா ஐயோனோ, மைக்ரோனீசியா கூட்டரசு மாநிலங்கள் பிரதமர் டேவிட் பனுவேலோ. படம்: இபிஏ

18 Aug 2019

ஃபிஜி பிரதமர்: ஆஸ்திரேலியப் பிரதமர் இழிவுபடுத்துகிறார்

பயங்கரவாதிகளை ஒழித்துவிட்ட தால் இலங்கை வருவோருக்கு நூறு விழுக்காடு பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறார் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க. படம்: ஊடகம்

18 Aug 2019

இலங்கை அமைச்சர்: தற்கொலைத் தாக்குதலில் இந்திய நாட்டினருக்கு எந்தத் தொடர்புமில்லை

நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வை யிட்டனர். படம்: ஊடகம்

18 Aug 2019

ஈப்போ மகா மாரியம்மன் ஆலயத்தில் 15 சாமி சிலைகள் உடைப்பு; இந்தோனீசிய ஆடவர் கைது