ஆஸ்திரேலியாவில் புதர் தீயை அணைக்க போராடும் குழுவினர்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலம் கடும் வெப்பத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக அனல்காற்று வீசுவதால் காடுகளில் புதர்கள் தீப்பற்றி எரியும் நிலையில் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். சுமார் 2,000 தீயணைப்பாளர்கள் தீயை அணைக்க மிகுந்த சிரமப்பட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தீயை அணைக்க விமானங்கள் மூலம் தண்ணீர் குண்டுகள் வீசப்பட்டு வருவதாகவும் தீயை அணைக்க தொண்டூழியர்களும் உதவி வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார். புதர்கள் தீப்பற்றி எரிவதால் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல பகுதிகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.