ஐஎஸ் குழுவில் சேர்ந்த இளைஞர் மனைவியுடன் நெதர்லாந்து திரும்ப விருப்பம்

லண்டன்: சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவில் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் தன் மனைவியுடன் தனது சொந்த நாடான நெதர்லாந்திற்கு திரும்பிச் செல்ல விரும்புவதாகக் கூறி யுள்ளார். ரியட்சிக் என்ற அந்த இளைஞர் தற்போது சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள குர்தியர்களின் தடுப்பு நிலையத் தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஐஎஸ் குழுவுக்காக சண்டை யிட்டதை ஒப்புக்கொண்ட அந்த இளைஞர் தன் மனைவி ஷமீமா பேகத்துடன் நெதர்லாந்து திரும்பிச்செல்ல விரும்புவதாக பிபிசி செய்தியாளர் ஒருவரிடம் கூறியுள்ளார். ஐஎஸ் குழுவிலிருந்து வெளியேற தான் பல தடவை முயன்றதாகவும் அவர் கூறினார். இவரது மனைவி பேகம் லண்டனிலிருந்து தப்பிச்சென்று சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவில் சேர்ந்தவர். சிரியாவில் பேகத்தை திருமணம் செய்துகொண்டது பற்றி ரியட்சிக் விவரித்தார். பேகம் சிரியாவுக்கு தப்பிச் சென்றபோது அவருக்கு வயது 15. தற்போது 19 வயதாகும் பேகம் தன் மகனை வளர்க்க பிரிட்டன் திரும்ப விரும்புவதாக சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.