கைது செய்யப்பட்ட மியன்மார் வீரரை ஒப்படைத்தது பங்ளாதேஷ்

டாக்கா: பங்ளாதே‌ஷில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்ட மியன்மார் வீரரை மியன்மார் எல்லை போலிசாரிடம் ஒப்படைத்ததாக பங்ளாதேஷ் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆங் போ போ தியன் என்ற வீரர் மியன்மார் எல்லையைத் தாண்டி வந்ததாகவும் காட்டுப் பகுதியில் காணப்பபட்ட அவரை பங்ளாதேஷ் பாதுகாப்புப் படையினர் கடந்த ஜனவரி 24ஆம் தேதி கைது செய்ததாகவும் மூத்த அதிகாரி ரஹ்மான் கூறினார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அந்த வீரரை பங்ளாதேஷ் மியன்மாரிடம் ஒப்படைத்துள்ளது. மியன்மாரிலிருந்து சுமார் 740,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்ளாதே‌ஷிற்கு தப்பியோடி வந்தது முதல் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி