பிலிப்பீன்சில் தட்டம்மை பாதிப்பு அதிகரிப்பு

மணிலா: பிலிப்பீன்சில் தட்டம்மை தொற்று நோயால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 14,000 யும் தாண்டிவிட்டதாகவும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பீன்சில் டெங்கி காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போடப்பட்ட தடுப்பூசி சிலரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்பட்டதால் தடுப்பூசி குறித்த அச்சம் மக்களிடம் அதிகரித் துள்ளது. இதனால் தட்டம்மை நோய் தொற்றாமல் இருக்க போடப்படும் தடுப்பூசிக்கும் மக்களிடம் அதிக வரவேற்பு இல்லை. இலவசமாகப் போடப்படும் தடுப்பூசி என்றாலே மக்களிடம் ஒருவித அச்சம் காணப்படுகிறது.

மக்களிடையே நிலவும் இத்தகைய அச்சத்தைப் போக்கி தட்டம்மைக்கு எதிராகப் போடப் படும் தடுப்பூசியின் முக்கியத் துவத்தை அதிகாரிகள் தற்போது எடுத்துரைத்து வருவதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வரையிலான அரசாங்க புள்ளி விவர கணக்குப்படி மொத்தம் 14,938 பேருக்கு தட்டம்மை தொற்றியிருந்ததாகவும் இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களில் 238 பேர் மரணம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆகவே தட்டம்மைக்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை தாங்கள் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைத்து வருவதாக சுகாதார துணை அமைச்சர் எரிக் டோமின்கோ கூறினார்.