சீனாவில் செய்தி வாசிக்கும் இயந்திரப் பெண்

மனிதர்களைப் போலவே முக அசைவுகளைச் செய்துகாட்டும் இயந்திரப் பெண் ஒருவரை சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வாசிப்பாளராகப் பயன்படுத்தியுள்ளது. பெய்ஜிங் நாடாளுமன்றக் கூட்டம் பற்றிய செய்தியை ‘சின் சியாவ்மிங்’ என்ற அந்த இயந்திரப் பெண் நேற்று அந்நாட்டுத் தொலைக்காட்சி செய்தியில் படித்துக் காட்டியது.

நிஜ வாழ்க்கையில் சின்ஹுவா செய்தி வாசிப்பாளராக இருக்கும் சூ மெங்கின் தோற்றத்தையும் குரலையும் கொண்டு செயற்கை நுண்ணறிவு பொருந்திய ‘சின் சியாவ்மிங்’ உருவாக்கப்பட்டுள்ளது. சின்ஹுவாவும் தொழில்நுட்ப நிறுவனம் சோகூவும் இணைந்து இதனைப் படைத்தன.

சீனாவின் கிழக்கிலுள்ள வூசன் நகரில் கடந்த நவம்பர் நிகழ்ந்த உலக இணைய மாநாட்டில் ஆண்களைப் போல தோற்றம் அளிக்கும் இரண்டு இயந்திர மனிதர்களை சின்ஹுவா காட்சிக்கு வைத்தது.

செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய போட்டியில் சீனா அசுர வேகத்தில் முந்திக்கொண்டு வருவதற்கான முக்கிய சான்றாக இத்தகைய இயந்திர மனிதர்கள் திகழ்கின்றன. கண்காணிப்பு கேமரா முதல் சுயமாக ஓட்டிக்கொள்ளும் கார்கள் வரை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் பொருட்களின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்தத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்