அலபாமாவில் 14 பேரைப் பலிவாங்கிய சூறாவளி

அலபாமா: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தைச் சூறாவளி தாக்கியதில் குறைந்தது 14 பேர் பலியானதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இதனுடன் பல்வேறு வீடுகள் சேதமடைந்ததாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மீட்புப் பணியாளர்கள் அல்லும் பகலும் பாடுபட்டு கட்டடச் சிதைவுகளிலிருந்து காயமடைந்தோரையும் உயிரிழந்தோரின் சவங்களையும் மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாண்டோரின் எண்ணிக்கை மேலும் உயரலாம் எனக் கூறப்படுகிறது. 

வானிலை மேலும் மோசமாகலாம் என்று அலபாமாவின் ஆளுநர் கே ஐவே டுவிட்டரில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தைக் கையாள, அலபாமா மாநிலத்திற்கான அவசர நிலையை நீட்டிக்கப்போவதாகத் திருவாட்டி கே கூறினார்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்