சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம்

சுலாவேசியிலுள்ள தீவிலுள்ள தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 100 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சுரங்கத்திலிருந்து 19 பேர் காப்பாற்றப்பட்டதுடன் ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த அசம்பாவிதம் கடந்த செவ்வாய்கிழமை (பிப்ரவரி 26) நேர்ந்தது. 

மீட்புப் பணிகள் மேலும் ஒரு வாரத்திற்குத் தொடரும் என்று அதிகாரிகள் கூறியபோதும், உயிருடன் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீரைச் சேர்க்கும் முயற்சிகள் தொடர்பில் பற்றி எதுவும் கூறவில்லை.

விபத்தின்போது சுரங்கத்திற்குள் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தேசிய பேரிடர் நிர்வாகப் பேச்சாளர் சுடோபோ பூர்வோ நுக்ரோஹோ தெரிவித்தார்.