அலபாமாவை ஆட்டிப்படைத்த சூறாவளி: 23 பேர் உயிரிழப்பு

அலபாமாவின் பியூர்கார்ட் என்னும் இடத்தில் மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான அலபாமாவில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த சூறாவளியில் 23 பேர் மாண்டுவிட்டனர். அந்த எண்ணிக்கையில் குழந்தைகளும் அடங்குவர். வீடுகள் இடிந்து சேதமுற்றிருப்பதால் அவற்றில் வசித்தவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். அதனால் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. லீ கவுண்டியை ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து இரு சூறாவளிகள் தாக்கியதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனால் பல இடங்களில் போக்குவரத்து நிலைகுத்தியது. படம்: ராய்ட்டர்ஸ்