சுடச் சுடச் செய்திகள்

சீனாவில் செய்தி வாசிக்கும் இயந்திரப் பெண் அறிமுகம்

பெய்ஜிங்: மனிதர்களைப் போலவே முக அசைவுகளைச் செய்துகாட்டும் இயந்திரப் பெண் ஒன்றை சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வாசிப்பாளராகப் பயன் படுத்தியுள்ளது. 
பெய்ஜிங் நாடாளுமன்றக் கூட்டம் பற்றிய செய்தியை ‘சின் சியாவ் மிங்’ என்ற அந்த இயந்திரப் பெண் நேற்று முன் தினம் அந்த நாட்டுத் தொலைக் காட்சி செய்தியில் வாசித்தது.
நிஜ வாழ்க்கையில் சின் ஹுவா செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் சூ மெங்கின் என்பவரின் தோற்றத்தையும் குரலையும் கொண்டு செயற்கை நுண்ணறிவு பொருந்திய அந்த இயந்திரப் பெண் உருவாக்கப் பட்டுள்ளது. 
சின்ஹுவாவும் தொழில்நுட்ப நிறுவனமான ‘சோகூ’வும் இணைந்து இதை உருவாக்கின.
சீனாவின் கிழக்கிலுள்ள வூசன் நகரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற உலக இணைய மாநாட்டில் ஆண் களைப் போல தோற்றம் அளிக்கும் இரண்டு இயந்திர மனிதர்களை சின்ஹுவா நிறு வனம் காட்சிக்கு வைத்தது.
செயற்கை நுண்ணறிவுக் கான உலகளாவிய போட்டியில் சீனா அசுர வேகத்தில் முந்திக் கொண்டு வருவதற்கான முக்கிய சான்றாக இத்தகைய இயந்திர மனிதர்கள் திகழ்கின்றன. 
கண்காணிப்பு புகைப்படக் கருவி முதல் ஓட்டுநரில்லா வாக னங்கள் வரை செயற்கை நுண்ண றிவைப் பயன்படுத்தும் பொருட் களின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படவேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.2019-03-05 06:10:00 +0800