‘யுனிசெஃப்’ நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து பிரியங்கா சோப்ராவை நீக்க மனு

மும்பை: இந்திய விமானப் படைக்கு ஆதரவு தெரிவித்ததால், ‘யுனி செஃப்’ நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மனு அளித்து உள்ளனர்.
புல்வாமாவில் பிப்ரவரி 14ஆம் தேதி அரங்கேற்றப்பட்ட பயங்கர வாதத் தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 
இந்தக் கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல் படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்கு எதிராக, இந்தியா கொந்தளித்தது. 
இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதி கரித்தது.
இதையடுத்து கடந்த மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பயங் கரவாத முகாம் மீது இந்திய விமானப் படை சரமாரியாகக் குண்டுகளை வீசியது. 
இந்தத் தாக்குதலில் பயங்கர வாத முகாமில் இருந்த 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படு கிறது.
இதையடுத்து இந்திய விமானப் படைக்கு இந்தியர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரி வித்தனர். சமூக வலைத்தளங்கள் வாழ்த்துகளால் நிரம்பியது. சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அவர்களில் ஒருவராக, நடிகை பிரியங்கா சோப்ராவும் “ஜெய்ஹிந்த்” என்று கூறியிருந்தார். 

2016ஆம் ஆண்டில் யுனிசெஃப் நல்லெண்ண தூதராக பிரியங்கா நியமிக்கப்பட்டார். படம்: இணையம்