எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிய 2வது நபர்

லண்டன்: உலகிலேயே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 2வது நபர் ஒருவர், எச்ஐவி கிருமிகளி லிருந்து விடுபட்டுள்ளார்.
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு அவரிடம் எச்ஐவி வைரஸ் கிருமி அறவே இல்லை என்று  அவரது மருத்துவர் ஒருவர் கூறினார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு எச்ஐவி கிருமி யை எதிர்க்கும் வல்லமையுள்ள அரிய மரபணுக்களுடன் மூல உயிர் அணுக்களைக் கொண்ட எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு வழங்கப் பட்டது. அதன் பிறகு கடந்த 18 மாதங்களாக அவரிடம் எய்ட்ஸ் நோய் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை என்று யூனிவர் சிட்டி காலேஜ் லண்டனில் பணி யாற்றிய தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பணி யாற்றும் பேராசிரியர் ரவீந்திரா குப்தா தெரிவித்தார். ஒரு நாள் எய்ட்ஸ் நோய்க்கு முடிவு கட்டப் படும் என்பதையே இந்த சிகிச்சை காட்டுவதாகக் கூறிய திரு ரவிந் திரா குப்தா, எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்தாகிவிட்டது என அர்த்தமாகாது என்றும் சொன்னார்.