சீனாவின் பொருளியல் வளர்ச்சி 6% - 6.5%

பெய்ஜிங்: சீனா, இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சியை வெகுவாகக்  குறைத்துள்ளது.
அமெரிக்காவோடு நிலவும் வர்த்தகப்பூசல், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை குறைந்தது போன்ற காரணங் களால் இவ்வாண்டின் பொரு ளியல் வளர்ச்சி ஆறு முதல் 6.5 விழுக்காடு வரை இருக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது.
தேசிய நாடாளுமன்ற ஆண்டுக் கூட்டத்தில் பேசிய அதிபர் ஸி ஜின்பிங், கடுமையான சவால்களுக்குத் தயாராக இருக் கும்படி கேட்டுக்கொண்டார்.
“முன் எப்போதும் இல்லாத மோசமான சூழ்நிலை நிலவு கிறது. ஆபத்துகளும் சவால் களும் நிறைந்த சூழ்நிலையை நாம் எதிர்நோக்க வேண்டியுள் ளது,” என்று அதிபர் ஸி சொன் னார். கீழ்நோக்கியிருக்கும் பொருளியலை தூண்டிவிடும் நடவடிக்கைகள் இம்முறை இடம் பெறாது என்று கூறிய திரு ஸி, அத்தகைய குறுகியகால நடவடிக் கைகள் நீண்டகால வளர்ச்சியைப் பாதித்துவிடும் என்று குறிப்பிட்டார்.