அம்னோ-பாஸ் கூட்டணியால் பாதகமில்லை: மஇகா

அம்னோவும் பாஸும் கூட்டணி அமைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) தெரிவித்தது. இத்தகைய ஒத்துழைப்பு புதிதாக இல்லை என்று மஇகாவின் தலைவர் எஸ். ஏ. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

ஜனநாயகச் செயல் கட்சியும் பக்கத்தான் ராக்யாட்டும் ப்ரிபுமி பெர்சாத்து, அமனா போன்ற மலாய், முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருப்பதை அவர் சுட்டினார்.