அம்னோ-பாஸ் நட்புறவில் தவறு எதுவும் இல்லை: மஇகா

மலேசியாவில் அம்னோவும் பாஸ் கட்சியும் கைகோர்த்துச் செயல்படு வதில் வியப்பு ஒன்றும் இல்லை என மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) கூறியுள்ளது.
அவ்விரு கட்சிகளுக்கும் இடை யில் தோழமையும் ஒத்துழைப்பும் ஏற்படுவதில் தவறேதும் இல்லை என்று மஇகா தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமானா கட்சியுடனும் பிரதமர் மகாதீரின் பிபிபிஎம் கட்சியுடனும் இணைந்து ஜனநாயகச் செயல் கட்சி செயல்படும்போது அம்னோ வும் பாசும் சேருவதில் என்ன தவறு என்று அவர் வினவினார்.

“இந்தியர்களுக்குப் பலனளிப் பதாக இருந்தால் அந்த கூட்டு முயற்சியில் நாங்கள் தவறு காணப் போவதில்லை,” என்றும் திரு விக் னேஸ்வரன் (படம்) குறிப்பிட்டார்.
மலேசியாவின் இரு பெரும் கட்சிகளான அம்னோவும் பாசும் இணைந்து செயல்படப்போவதாக நேற்று முன்தினம் அறிவித்தன. 
அதன்தொடர்பில் திரு விக் னேஸ்வரன் இக்கருத்துகளைக் கூறியதாக ‘த ஸ்டார்’ இணையத் தளம் கூறியுள்ளது.

எதிர்த்தரப்பு தேசிய முன்னணி யில் அங்கம் வகிக்கும் மலேசிய இந்தியர் காங்கிரசும் மலேசிய சீனர் சங்கமும் தனியாகப் புதிய கூட்டணி அமைப்பது குறித்து அவ்விரு கட்சிகளும் கூட்டாகத் தெரிவித்ததற்கு மறுநாள் அம்னோ =பாஸ் ஒத்துழைப்பு குறித்த அறி விப்பு வெளி யிடப்பட்டது.
அண்மை யில் நடந்து முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர் தலின் போது தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஸிஸ் இனவாதக் கருத்து களை வெளியிட்டதாகக் கூறி இந்த இரு கட்சிகளும் அவருக்கு எதிராகத் திரும்பின. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங்கின் மத்திய வட்டாரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் நேற்று களத்தில் குதித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். செப்டம்பரில் தொடங்கும் பள்ளி பருவத்தையும் மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். படம்: இபிஏ

23 Aug 2019

வன்முறை; ஹாங்காங் வங்கிகள் கண்டனம்