‘சீருடை,  ஒப்பனை அவசியம் இல்லை’ 

லண்டன்: வர்ஜின் அட்லாண்டிக் விமானப் பணிப்பெண்கள் அவர் களுடைய சிவப்பு குட்டைப் பாவாடை, ‘ரூபி’ காலணிகள், அடர்த்தியான உதட்டுச் சாயத்துக்குப் பெயர் போனவர்கள். 
ஆனால் இனி ஒப்பனையில்லாமலும் விரும்பிய உடையிலும் வரலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேபோல கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் தனது அனைத்து ஊழியர்களுக்கும் சீருடை நிபந்தனைகளைத் தளர்த்தியுள்ளது.
வேலை இடத்தை ஒரு சாதாரண இடமாக ஊழியர்கள் கருத வேண்டும் என்ற நோக்கத்தில் வால் ஸ்தீரிட் முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஜேபி மார்கன் போன்ற இதர வங்கிகளும் இதே பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளன.