லண்டனில் மூன்று இடங்களில் வெடிபொருள் கண்டுபிடிப்பு

லண்டன்: லண்டன் விமான நிலை யங்கள், ரயில் நிலையம் உட்பட மூன்று வெவ்வேறு இடங்களில் சிறிய அளவில் தீயை  ஏற்படுத்தக் கூடிய வெடிபொருட்களை அதி காரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஹீத்ரோ விமான நிலையத்துக்கு அடுத்துள்ள அலுவலகக் கட்டடம், வாட்டர்லூ நிலையத்தில் உள்ள அஞ்சல் அறை, தலைநகரின் கிழக்கே லண்டன் நகர விமான நிலையத்துக்கு அருகேயுள்ள அலு வலகங்களில் வெடிபொருள் அடங்கிய உறைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்தனர்.
“உறைகள் அனைத்தும் ‘A4’ அளவில் இருந்தன. வெடிபொருட் களை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர்,” என்று லண்டன் நகர காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
இந்த விசாரணையில் தாங் களும் உதவி வருவதாக அயர் லாந்து போலிசார் தெரிவித்தனர்.
ஹீத்ரோவுக்கு அருகேயுள்ள கம்பாஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட உறையை திறந்து பார்த்தபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் யாரும் காயம்  அடைய வில்லை. விமானச் சேவைகளும் பாதிக்கப்படவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்