வடகொரிய ஏவுகணை தளம் தயாராகிறது 

பியோங்யாங்: வடகொரியா அமெரிக்காவுக்கு அளித்த வாக் குறுதியை மீறி ஏவுகணை பாய்ச்சும் தளத்தை மீண்டும் ஆயத்தப்படுத்தி வருகிறது.
டோங்சாங்-ரி என்ற இடத்தில் உள்ள ஏவுகணைத் தளத்தை மூடப்போவதாக அதிபர் டிரம்புக்கு வடகொரியா வாக்களித்திருந்தது.
ஆனால் அண்மையில் நடை பெற்ற டிரம்ப்-கிம் 2வது உச்சநிலை சந்திப்பில் பலன் எதுவும் ஏற்படாத தால் ஏவுகணை பாய்ச்சும் தளத்தை வடகொரியா மேம்படுத் தும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளது.
ஏவுகணைத் தளத்தின் ஒரு பகுதியை வடகொரியா சீர்செய்து வருவதை அண்மையில் எடுக்கப் பட்ட துணைக்கோளப் படங்கள் காட்டுகின்றன.
சிங்கப்பூரின் முதல் சந்திப்புக் குப் பிறகு வியட்னாமில் நடை பெற்ற 2வது டிரம்ப்-கிம் உச்சநிலை சந்திப்பில் அணுவாயுதக் களைவுக் கான உடன்பாடு காணப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது.

ஆனால் 2வது உச்சநிலை சந்திப்பு அரைகுறையாக முடிந்தது.
அமெரிக்கா தங்கள் மீது விதித்துள்ள தடைகளை ஓரளவு அகற்ற வேண்டும் என்று வட கொரியா கோரிக்கை விடுத்த தாகவும் அதற்கு அமெரிக்கா சம் மதிக்கவில்லை என்றும் கூறப்படு கிறது.