வெனசுவேலாவில் அமெரிக்க செய்தியாளர் கைது

வெனசுவேலாவின் அரசாங்கம் அமெரிக்க செய்தியாளர் ஒருவரைக் கைது செய்திருக்கிறது. கைதுக்கான காரணம் தெளிவாக இல்லை. வெனசுவேலிய அதிபர் நிக்கலஸ் மடுரோவைப் பதவியிலிருந்து விலக நெருக்குதல் கொடுக்கும் முயற்சியாக அமெரிக்கா அந்நாட்டின் வங்கிகளின் மீது வர்த்தகத் தடை விதித்திருக்கிறது.

இதற்கு முன்னர், தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக வெனசுவேலாவுக்கான ஜெர்மானிய தூதரை அதிபர் மடுரோ நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டார்.

வெனசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை அந்நாட்டின் சட்டபூர்வ தலைவராகப் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் அங்கீகரிக்கின்றன. கடந்தாண்டு பொதுத்தேர்தலில் மோசடி செய்து திரு மடுரோ மீண்டும் அதிபர் பதவியை ஏற்றதாக திரு குவைடோ குற்றம் சாட்டினார்.

அதிகளவு பணவீக்கம், உணவுத்தட்டுப்பாடு ஆகியவற்றால் வெனசுவேலா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்