பத்துமலை ஆலய நிர்வாகி வீட்டில் மில்லியன்கணக்கில் பணம் சிக்கியது 

பத்துமலை ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.நடராஜாவின் வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதி காரிகள் நடத்திய சோதனையில் ஒரு மில்லியன் ரிங்கிட், வெளிநாட்டுப் பணம், ஏராளமான விலையுயர்ந்த கைக்கடிகாரங் கள், சொகுசு கார்கள், தங்கம், நகைகள், விலைமதிப்புமிக்க பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
வெளிநாட்டுப் பணத்திற்கு நிகரான மலேசிய ரிங்கிட் மதிப்பு உட்பட கைப் பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களின் மதிப்பையும் கணக்கிடும் பட்டியலில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை கோத்தா டமன்சராவில் உள்ள திரு நடராஜாவின் வீட்டில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான ஆலயத்திற்குச் சொந்தமான நில மேம் பாட்டுத் திட்டம் தொடர்பில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து அந்தச் சோதனை இடம்பெற்றது.
திரு நடராஜாவின் வீடு மட்டுமின்றி, பத்துமலையில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான ஆலய அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடந்தினர்.
சோதனை தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப் பட்டன. திரு நடராஜாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை அதிகாரிகள் எண்ணுவதையும் நகைகள், கைக்கடி காரங்களை அவர்கள் சோதனையிடு வதையும் அப்படங்கள் காட்டின.2019-03-08 06:10:00 +0800