பிலிப்பீன்சுக்கு மகாதீர் எச்சரிக்கை

மணிலா: வெளிநாட்டவர்களை அதிக அளவில் நாட்டுக்குள் அனு மதித்தால் அரசியல் நிலைப்பாட்டை பாதிக்கும் என்று பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு மலேசிய பிரதமர் மகாதீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டின் தேர்தலில் டுட்டர்ட்டே வெற்றி பெற்றதிலிருந்து குறைந்தது 200,000 சீனர்கள் மணிலாவுக்குள் நுழைந்துள்ளனர்.
இவர்களில் பலர், சீனர்களை இலக்காகக் கொண்டு நடத்தப் படும் இணைய சூதாட்ட நிறுவனங்களிடம் பணியாற்றுகின்றனர் என்று கடந்த ஆண்டு பிலிப்பீன்சில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.
வெளிநாட்டவர்களின் வருகையால் சொத்து விலை அதிகரித்து வருகிறது, உள்ளூர்காரர்களின் வேலைகள் பறிக்கப்படுகின்றன, வருமான வரியையும் பாதிக்கிறது என்று பிலிப்பீன்சின் அரசியல்வாதிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பீலிப்பீன்சுக்கு வருகையளித்துள்ள டாக்டர் மகாதீர், வெளிநாட்டவர்கள் பெருமளவில் குவிவது குறித்து எச்சரித்தார்.