அமெரிக்கா மீது ஹுவாவெய் வழக்கு

வா‌ஷிங்டன்: சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய், தனது நிறுவனத்தின் பொருட்களை அரசாங்க அமைப்புகள் பயன்படுத்த அமெரிக்கா விதித்துள்ள தடைக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளது. ஹுவாவெய் மீதான தடைக்கு ஆதாரங்களை வெளியிட அமெரிக்க அரசாங்கம் தவறிவிட்டது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
“எங்களுக்கு எதிரான தடை சட்டவிரோதமானது மட்டுமல்ல, நியாயமான முறையில் வர்த்தக போட்டிகளில் பங்கேற்பதையும் தடுக்கிறது. மேலும் அமெரிக்க பயனீட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று    ஹுவாவெய்யின் தற்போதைய தலைவரான           திரு குவோ பிங் குறிப்பிட்டார்.