இத்தாலி திட்டம்; அமெரிக்கா கவலை

ரோம்: சீனாவின் மாபெரும் திட்டமான பல நாடுகளை உள்ளடக்கும் வர்த்தகப்பாதையில் இணைய இத்தாலி திட்ட மிட்டு வருவதால் அமெரிக்கா கவலை அடைந்துள்ளது.
இத்தாலியின் இந்த நடவடிக்கையால் அனைத்துலக அளவில் அதற்குள்ள மதிப்பு பாதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது. இந்த நிலையில் இத்தாலியின் துணை தொழில்துறை அமைச்சர், “இம்மாதம் சீன அதிபர் ஸி ஜின்பிங் இத்தாலிக்கு வரும்போது உடன்பாட்டில் இத்தாலி கையெழுத்திட்டால் அது நிபந்தனையற்ற ஒரு தொடக்கமாகவே இருக்கும்,” என்று கூறியுள்ளார்.