ஜோகூரில் நச்சு வாயு கசிவு; மருத்துவமனையில் 30 பேர்

ஜோகூர் பாரு: மலேசியாவில் நச்சுக் கசிவால் பாதிக்கப்பட்ட முப்பது பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஜோகூர் பாரு ஆற்றில் சட்ட விரோதமாக வீசப்பட்ட ரசாயனக் கழிவிலிருந்து நச்சு வாயு கிளம் பியதாக நேற்று வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து பேசிய ஜோகூர் பாரு மாநில மூத்த சுகாதார அதிகாரி சாஹ்ருடின் ஜமால், சுல்தானா இஸ்மாயில் மருத்துவமனையில் 21 பேரும் பாசிர் கூடாங் சுகாதார மருந்தகத் தில் ஆறு பேரும் பெனாவர் மருத்துவமனையில் மூன்று பேரும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர் என்றார்.
“மாணவர் உட்பட பாதிக்கப்பட்ட இருவருக்கு குரல்வளையைத்  திறக்கும் சிகிச்சை அளிக்கப் பட்டது,” என்று செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்தார்.
நச்சுவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று மேலும் அவர் சொன்னார்.
பாசிர் கூடாங்கில் உள்ள சுங்கை கிம் கிம் ஆற்றிலிருந்து அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாலம் கட்டப்படும் இடத்தில் ரசாயனக் கழிவு வீசப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.