கனமழை, நிரம்பி வழியும் ஆறு, கரைபுரண்டோடும் வெள்ளம்

கனமழை, நிரம்பி வழியும் ஆறு, கரைபுரண்டோடும் வெள்ளம்

1 mins read
0f765f0a-e063-4c02-93fb-33f6d241a28c
-

இந்தோனீசியாவின் ஜாவா மாநிலம் பண்டுங் மாவட்டத்தில் பெருகிய வெள்ளத்தால் 22,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை தொடங்கிய கனமழை விடாது பெய்ததன் காரணமாக சில இடங்களில் 2.8 மீட்டர் உயரத்துக்கு நீர் தேங்கியது. குறிப்பாக சிட்டாரம் ஆறு நிரம்பி வழிந்ததன் காரணமாக பத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இருந்தபோதிலும் உயிர்ச்சேதம் குறித்த தகவல் இல்லை. வெள்ள நீரில் சிக்கிய பலரும் குதிரை வண்டி மூலம் மாற்று இடம் தேடிச் சென்றார்கள். படம்: ஏஎஃப்பி