மலேசிய குழந்தை மரணத்துக்கு காதல் விவகாரம் காரணமாம்

மலேசியாவில் மூன்று வயது குழந் தை மரணத்துக்கு முக்கோணக் காதல் காரணமாக இருக்கக்கூடும் என்று போலிஸ் நம்புகிறது. உல்லாசத் தளமான லங்காவி யில் உள்ள காட்டுப் பகுதியில் நூர் ஆயிஷா அலியா (படம்) எனப்படும் அக்குழந்தையின் சட லம் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் இந்தோனீசிய தாயார் ஒரு மாதத்திற்கு முன் சந்தித்த 37 வயது ஆடவரை விரும்பி குழந்தையுடன் அவருடன் சென்ற தாகவும் அந்தப் பெண் தமது குடும்பத்துக்குப் பணிபுரிய வந்தி ருக்கும் ஒற்றைத் தாயார் என்று தமது மனைவியிடம் அந்த ஆடவர் கூறியதாகவும் ஆரம்பக்கட்ட விசா ரணையில் தெரிய வந்துள்ளது என்று லங்காவி வட்டார தலைமை போலிஸ் அதிகாரி முகம்மது இக்பால் இப்ராகிம் கூறினார்.

இருப்பினும் கணவன், மனை விக்கு இடையே தகராறு ஏற்பட்டு அந்தப் பெண் வெளியேற்றப்பட்டார். ஆனால் அவரது குழந்தை நூர் ஆயிஷா அந்த வீட்டிலேயே இருந் தது. பிப்ரவரி இறுதியில் தமது குழந்தையைக் காணச் சென்ற அந்தப் பெண் ஏமாற்றமடைந்தார். குழந்தை எங்கே என்ற கேள்விக்கு அந்தத் தம்பதி சரிவர பதில் தெரிவிக்கவில்லையாம். மேலும் போலிஸ் தேடிச் செல்கையில் தம் பதியினர் தலைமறைவாகிவிட்ட னர். இருப்பினும் தீவிர தேடலில் அவர்கள் சிக்கினர்.