83வது பிறந்தநாளன்று சாமிவேலு மீது ஊழல் புகார்

மலேசியாவின் முன்னாள் பொதுப் பணி அமைச்சரும் முன்னாள் மஇகா தலைவருமான சாமிவேலு மீது நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் மூன்றாம் முறையாக புகார் செய்யப்பட்டது. திரு சாமிவேலுவின் 83வது பிறந்தநாளான நேற்று அவருக்கு எதிரான இந்தப் புகாரை அளித் தவர் சுங்கை சிப்புட் தொகுதியின் முன்னாள் மஇகா தலைவர் எம்.லோகநாதன். கேபிஜே கூட்டுறவுக் கழகத் துக்குச் சொந்தமான நிலத்தை அதன் சந்தை மதிப்பைக் காட்டி லும் குறைவான விலைக்கு சாமி வேலு வாங்கியதாகவும் இதன் மூலம் அமைச்சர் என்னும் அதி காரத்தை அவர் தவறாகப் பயன் படுத்தியதாகவும் திரு லோக நாதன் தமது புகாரில் தெரிவித்து உள்ளார்.