இந்தோனீசிய தேர்தலுக்குத் தயாராகும் அடுத்த தலைமுறை பெண்கள்

ஜகார்த்தா: இந்தோனீசிய அரசியல் களத்தில் பிரபல பெண்கள் கட்சிகளை வழிநடத்தி வருவதோடு, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவும் உள்ளனர். 
இந்தோனீசியாவின் நிறுவனராகக் கருதப்படும் சுகார்னோவின் மகளும் அந்நாட்டின் ஆகப் பெரிய அரசியல் கட்சியின் தலைவியுமான மேகாவதி சுகார்னோபுத்ரி தற்போதைய நிலையிலும் அதிக செல்வாக்குள்ள அரசியல்வாதியாக விளங்குகிறார். அவர் இந்தோனீசியாவின் அதிபராக இருந்திருந்தாலும் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவில்லை. முன்னாள் அதிபர் சுகார்த்தோவின் இரண்டு மகள்களும் மற்றொரு முன்னாள் அதிபர் அப்துர்ரஹ்மான் வாஹித்தின் மகளும் இத்தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கக்கூடும். இதுவரை மேகாவதி மட்டுமே தேர்தலில் போட்டியிட்டுள்ளதையடுத்து இந்தத் தேர்தல் மிகவும் ஆவலுடன் கவனிக்கப்பட்டு வருகிறது.