ஜோகூர் நச்சு வாயு கசிவு; அவசர சிகிச்சைப் பிரிவில் நால்வர் 

ஜோகூர் பாரு: ஜோகூரில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் நால்வர் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்னமும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 
ஜோகூரில் உள்ள ஓர் ஆற்றில் ரசாயனக் கழிவு சட்டவிரோதமாக வீசப்பட்டதைத் தொடர்ந்து அதை மலேசிய அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. எண்ணெய்க் கலவையாக இருந்த ரசாயனம் சட்டப்படி முறையாக வீசப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாமல் அபாயகரமான நச்சு வாயுவை வெளியேற்றியுள்ளது என்றும் விசாரணை மேற்கொண்டதில் கண்டறியப்பட்டது.