பிலிப்பீன்சில் அதிர்ச்சியூட்டும் பிளாஸ்டிக் கழிவு

மணிலா: பிலிப்பீன்ஸ் நாட்டில் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருவதாக ‘என்ஜிஓ காயா’ வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
பிலிப்பீன்ஸ் நாடு முழுவதும் உள்ள கடைகளில் பொருள் வாங்குவதற்கென பயன்படுத்தப் படும் பைகள் ஒரு நாளைக்கு 57 மில்லியன் என்றும் ஓராண்டில் கிட்டத்தட்ட 20 பில்லியன் என்றும் கணக்கிடப்படுகிறது.

இவ்வெண்ணிக்கையில் சிறிய, மெல்லிய பிளாஸ்டிக் பைகள் அடங்கவில்லை. இந்த எண் ணிக்கையை ஆராய்ந்தால், ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு ஒரு பை பயன்படுத்தப்படுகிறது என்றார் அறிக்கை வெளியிட்ட அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஃபுரோய் கிரேட். சாதாரண காப்பி கூட பெருமளவில் வாங்க விரும்புவோர் அவற்றைப் பைகளில்தான் வாங்க முடி யுமே தவிர பெட்டிகளில் அல்ல எனக் கூறப்பட்டது. பிலிப்பீன்ஸ் அரசாங்கமும் தொழில் துறைகளும் ஒரே முறை பயன் பாட்டுக்குரிய பிளாஸ்டிக்கை குறைக்க முயற்சிகள் எடுப்பதற்கு அமைப்பு தேவையான நடவடிக்கை எடுக்கும்.