அன்வாரின் சொத்து மதிப்பு 10.7 மில்லியன் ரிங்கிட்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் தம்மிடம் உள்ள மொத்த சொத் துகளின் மதிப்பை 10.7 மில்லியன் ரிங்கிட் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தெரிவித் தார்.  
அரசாங்கம் கேட்டுக்கொண்ட தற்கு இணங்க அன்வார் இத் தகவலைக் கூறினார்.
அவர் கூறியிருந்த தொகையில் புக்கிட் செகாம்புட்டில் உள்ள அவரின் 9.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வீடும் அடங்குவதாக அன்வாரின் அந்தரங்கச் செயலாளர் ‌ஷுக்ரி சாட் நேற்று முன்தினம் விவரம் வெளியிட்டார்.
அத்துடன் அன்வார் குவாந்தானில் வாங்கியிருந்த நிலம் தற்போது 420,000 ரிங்கிட் என மதிப்பிடப்படுகிறது.

அவரிடம் உள்ள மற்ற சொத் துகள் கிட்டத்தட்ட 830,000 ரிங்கிட் மதிப்புடையது. 
அவை முதலீடுகள், சேமிப்பு வங்கிக் கணக்குகளுள் அடங் கும்.
தங்களிடம் எவ்வித ஒளிவு மறைவும் இல்லாததைக் காட்டு வதற்காக பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  அவர்களின் குடும்பத்தினர் சிலர் ஆகியோரின் வருமானத்தைப் பொதுமக்களுக்குத் தெரியப் படுத்த விரும்பியது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இணையத்தளத் தில் இப்பட்டியல் வெளியிடப்பட் டது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி